5

ஞ்சபூதங்களின் ஆற்றல் கிடைக்கும் வகையில் வீடுகட்ட வேண்டும். பூமியானது வடகிழக்கு சரிவுடன் சுற்றிவருகிறது. எனவே வடகிழக்கு தாழ்ந்தும், தென்மேற்கு உயர்ந்தும் வீடு அமைக்கவேண்டும். இயற்கையையொட்டி வீடுகட்டினால் நற்பலனளிக்கும். மூங்கில், ஆச்சா, தேக்கு, கருங்காலி, வேங்கை, சந்தனம், வேம்பு, பூவரசு, கடுக்காய், மா, இலுப்பை, நாவல், மருது, வேலம், கமுகு, தென்னை, பனை போன்ற மரங்களைப் பயன்படுத்தி வீடுகட்டலாம். ஆல், அத்தி, அரசு, இலவு, இலந்தை, மகிளம், விளாம், வாகை, கூழை, கழிஞ்சி, வன்னி, வில்வம் போன்ற ரகங்கள் கொண்டு வீடு கட்டக்கூடாது என மனை நூல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

vasthuகடந்த வாரங்களில் மனை அமைப்பு, மூலை மட்டம், மேடு பள்ளம், நால்வகை மனை அமைப்புகள், சுற்றுச்சுவர், கிணறு, போர், சம்ப் அமைத்தல் போன்றவை குறித்துப் பார்த்தோம். தற்போது வீடு கட்டும்போது எப்படித் தொடங்கவேண்டும் என்று பார்ப்போம்.

வீடு கட்டத் தொடங்குமுன், வீட்டிற்கு குபேர திசையான வடக்கும் இந்திரன் திசையான கிழக்கும் காலியாக இருக்கவேண்டும்.

இத்திசைகளை அடைத்து வீடுகட்டினால், வீடு வளர்ச்சியில்லாமல் போகும். மேற்கு வருணன் திசை; தெற்கு எமன் திசை. இந்த திசைகளில் குறைவான இடம்விட்டு வீடுகட்ட வேண்டும். வீட்டிற்கு எமன் திசையான தெற்கு திசையில் அதிக காலி இடம் இருந்தால், லாபம் இல்லாமல் போகும். வாஸ்துப்படி வீடு இருந்தாலும் தெற்கு அதிக காலியாக இருந்தால் வீண் விரயங்கள் வந்துசேரும். தொடர்ந்து விரயங்கள் ஏற்பட்டு, வீட்டை விற்கும் நிலையும் ஏற்படும். வீட்டிற்கு மேற்கு வருணன் திசையாகும். இங்கும் அதிக காலி இடமாக இருந்தால் கணவன்- மனைவிக்குள் சண்டைச்சரவுகள் இருந்துகொண்டே இருக்கும். அல்லது உறவினர்களிடம், தெருவில் உள்ளவர்களிடம் சண்டை சச்சரவுகளாக இருக்கும். எமன் திசையும், மேற்கு திசையான வருணன் திசையும் குறைவான அளவிலே காலி இடமாக இருக்கவேண்டும். குபேரன் திசையான வடக்கு திசையும், இந்திரன் திசையான கிழக்கு திசையும் அதிக காலி இடத்துடன் இருக்கவேண்டும்.

Advertisment

வடக்கு திசையான குபேர திசை அதிக காலி இடமாக இருந்தால், தொடர்ந்து படிப்படியான வளர்ச்சி இருக்கும். கிழக்கு திசையான இந்திரன் திசை ஆண்களுக்கானது.

கிழக்கு காலியாக இருப்பின் ஆண்கள் நல்ல வளர்ச்சி அடைவர். அதிக காலியாக இருப்பின், ஆண் மகன் கட்டளையிடும் அதிகாரம் பெறுவார். வழக்கறிஞர், மருத்துவர், நடிகர், அமைச்சர் என ஆண்கள் சிறப்புடன் திகழ்வர். ஆண்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.

வடக்கு குபேரன் திசையாகும். அந்தத் திசை அதிக காலியாக இருந்தால் மிகச்சிறந்த வர்த்தகம் செய்வர். படிப்படியாக வளர்ச்சி அடைவர். நமது ஜாதகத்தில் கிரகப் பலன்கள் கடுமையாக பாதித்திருந்தாலும், வீட்டிற்கு வடக்கும் கிழக்கும் அதிக காலியாக இருந்தால் பாதிப்பைக் குறைத்துக்கொள்ளலாம்.

Advertisment

வீடு கட்டும்போது வீட்டிற்கு நான்கு திசைகளின் மூலைகளும் எந்தவொரு விதத்திலும் குறைவுபடக்கூடாது. வீடு கட்டும் இடத்திற்கு வடக்கு குறைவுபட்டால் குரேபன் அருளை இழப்பர். வடகிழக்கு மூலையான குரு திசை குறைந்திருந்தால் செல்வ வளம் குறைவுபடும்; நீதிமன்ற வழக்குகள் இருக்கும். ஆண் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள். அப்படி ஆண் பிள்ளை இருந்தால் அந்த வீட்டில் இருக்கமாட்டார்கள். அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு நிலைத்தல் தன்மை இல்லாமல் போகும். வீட்டிற்கு கிழக்கு காலிமனை குறைவுபட்டால்- ஆண்கள் துயரத்திற்கு உள்ளாவார்கள். தென்கிழக்கு மூலையான சுக்கிரன் திசை குறைவுபட்டால், எந்த கெடுபலன்களும் இல்லை. தெற்கு திசை குறைவுபட்டால் ராகு திசையும், சுக்கிர திசையும் வளர்ந்து கெடுபலன் அளிப்பர். வருணன் திசையான மேற்கு குறைந்தால் ராகு திசையும் சந்திரன் திசையும் வளரும். இதனால் கெடுபலன் உண்டு. ராகு திசையான பிள்ளையார் மூலை குறைந்திருந்தால் கெடுபலன் அதிகமாக இருக்கும். வீட்டிற்குத் தென்மேற்கு பிள்ளையார் மூலை குறைந்திருந்தால் வீடு குடிபுகுந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே கெடுபலனை அனுபவிப்பர். வடமேற்கு மூலையான சந்திரன் திசை குறைபடுவதால் கெடுபலன் ஏதுமில்லை.

எனவே வீட்டிற்கு குரு திசையான வடகிழக்கு திசையும், தென்மேற்கு திசையான ராகு திசையின் மூலையும் ஒரு இன்ச்கூட குறைவுபடக்கூடாது. அக்னிமூலையான சுக்கிரன் திசையும், சந்திரன் திசையான வடமேற்கு மூலையும் குறைவுபடலாம். கெடுபலன் இல்லை.

(தொடரும்)

செல்: 94434 80585